Latestமலேசியா

கோவிட் தொடர்பில் 9 பேர் மரணம்; புதிதாக 3,781 பேருக்கு தொற்று

கோலாலம்பூர், நவ 9 – 15 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இவ்வேளையில் கோவிட் தொற்றிலிருந்து நாடு முற்றாக விடுபடும் முயற்சியை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனினும் கோவிட் தொடர்பில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். அதோடு நாடு முழுவதிலும் 3,781 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது முதல் கோவிட் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் Noor Hisham தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 30 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 5ஆம் தேதிவரை மொத்தம் 26,616 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!