Latest

கோவிட் தொற்றுக்கு 15,902 பேர் உள்ளாகினர் சிலாங்கூர் 7,351பேர் மேற்பட்டோர் பாதிப்பு

கோலாலம்பூர், ஜூலை 23 – நாட்டில் கோவிட் தொற்று மிகவும் மோசமாகி வருகிறது என்பதற்கான அறிகுறியாக இன்று 15,906 பேர் அந்த தொற்றுக்கு உள்ளாகினர். இதன்வழி மலேசியாவில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கும் வகையில் தற்போது 996,393 ஆகியுள்ளது.

சிலாங்கூரில் மட்டும் 7,351 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். கோலாலம்பூரிலும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,406 ஆக உயர்ந்துள்ளளது. கெடாவில் 867 பேரும், ஜோகூரில் 804 பேரும், சபாவில் 712 பேரும், மலாக்காவில் 631 பேரும் தொற்றுக்கு உள்ளாகினர்.

மேலும் நெகிரி செம்பிலானில் 625 பேரும், பினாங்கில் 505 பேரும், கிளந்தானில் 502 பேரும், பேராவில் 469 பேரும், பகாங்கில் 406 பேரும் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா டிவிட் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!