Latestமலேசியா

கோவிட்; 19,740 பேருக்குத் தொற்று; மலாக்கா,சரவாக்கில் புதிய உயர்வு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 16 -நாட்டில் கடந்த 24 மணி   நேரத்தில் புதிதாக 19,740 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகிய வேளை சரவாக்கிலும், மலாக்காவிலும் கோவிட் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டிருக்கின்றன.

புதிதாக பதிவான கோவிட் தொற்று எண்ணிக்கையில் மொத்தம்  7,109 கோவிட் தொற்று சம்பவங்கள் அதாவது 36 விழுக்காடு தொற்றுகள்,  கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் பதிவாகின.

இவ்வேளையில், மலாக்காவில் முதல் முறையாக கோவிட் தொற்று ஆயிரத்தை தாண்டிய வேளை, சரவாக்கில்  1,566 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, நாட்டில்  கோலாலம்பூர், சிலாங்கூர், சபா, ஜோகூர் உட்பட ஒன்பது மாநிலங்களில் கோவிட் தொற்று ஆயிரத்திற்கும் உயர்வாக பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!