Latestஉலகம்மலேசியா

சாலையில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டிய ஆடவன் கைது

பெட்டாலிங் ஜெயா, மே 30 – டாமான்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் கதவுக்கு வெளியே, விளையாட்டு துப்பாக்கியைக் காட்டிய ஆடவனைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தொடக்க விசாரணையில், சம்பவத்தின் போது புரோட்டோன் வீரா காரை ஓட்டிய அந்த ஆடவன் , தான் வைத்திருந்த 2 ரிங்கிட் 40 சென் விலை கொண்ட அந்த விளையாட்டு துப்பாக்கி, தனது 4 வயது உறவுக்கார பிள்ளையின் உடையது என ஒப்புக் கொண்டான்.
மேலும் சம்பவத்தின் போது, தனது உறவுக்கார பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறினான்.

இதனிடையே அந்த ஆடவன் மீது ஒரு பழைய குற்றப் பதிவு இருந்தது தெரிய வந்திருப்பதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!