Latestமலேசியா

கோவிட் -19 தொற்றுக்கு புதிதாக 7,939 பேர் பாதிப்பு; 17 மரணம்

கோலாலம்பூர், டிச 18 – ஒரு வாரத்தில் புதிதாக 7,939 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து அத்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20,696 ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 10ஆம் தேதி மற்றும் டிசம்பர் 16ஆம் தேதிக்கிடையே 17 மரணங்கள் ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்வழி கோவிட் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 28ஆகவும் அதிகாரித்திருக்கிறது.

தற்போது 28,375 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அதிகமான அளவில் தொற்றின் பாதிப்பு உள்ளானவர்களைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது.

சிலாங்கூரில் மட்டும் 2,123 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 1,028 பேரும், சபாவில் 768 பேரும், ஜொகூரில் 564 பேரும், புத்ராஜெயாவில் 466 பேரும் கெடாவில் 453 பேரும் புதிதாக தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதவிர நெகிரி செம்பிலான், பேரா,பஹாங்,கிளந்தான்,திரெங்கானு,பினாங்கு , மலாக்கா, பெர்லீஸ் ஆகிய அனைத்து மாநிலங்களிலும் புதிய கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!