Latestஉலகம்மலேசியா

சிகரெட்டினால் வாரத்திற்கு 400 பேர் இறக்கின்றனர்; சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், ஜூலை 26 – இந்நாட்டில் ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய 400 பேர் சிகரெட் புகைக்கும் பழக்கத்தால் மரணமடைகின்றனர்.

மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களுக்குப் பெரும்பாலும் முதன்மை காரணமாக இருப்பது புற்றுநோயாகும். அத்தகைய புற்றுநோய் உருவாக முக்கியக் காரணமாக விளங்குவது சிகரெட் புகைக்கும் பழக்கம் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் (Khairy Jamaluddin) தெரிவித்தார்.

சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலவை, ஒருவரை அடிமையாக்கி விடுகிறது. சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது நிக்கோட்டின் 10 வினாடிகளுக்குள் நேரடியாக மூளைக்குச் சென்றடைந்து விடுகிறது. இதனால்தான் சிகரெட் புகைப்பவர்கள் அப்பழக்கத்தில் இருந்து அவ்வளவு சீக்கிரம் விடுபட முடிவதில்லை என அமைச்சர் விவரித்தார். ஆனால் அதன் விளைவு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு அவர்கள் ஆளாவதையும் கைரி சுட்டிக் காட்டினார்.

சிகரெட் புகைப்பவர்கள் தனக்கு மட்டும் நோயை வரவழைத்துக் கொள்வதில்லை. தன் அருகிலிருக்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் மேலும் சொன்னார். எனவே சிகரெட் புகைக்காத சமுதாயத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் தங்களின் பங்கை ஆற்றும்படி கைரி கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!