Latestஉலகம்

சிங்கப்பூர் வழியாக சிட்னி சென்றவருக்கு குரங்கம்மை

சிங்கப்பூர், ஜூன் 6 – Spain, Barcelona-விலிருந்து பயணமாகி, வழியில் சிங்கப்பூர் Changi விமான நிலையத்தில் இறங்கி மற்றோர் விமானத்தில் ஏறி , ஆஸ்திரேலியா சிட்னி சென்றடைந்த நபருக்கு குரங்கம்மை தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த தொற்றுக்கு ஆளானவர் ஜூன் முதலாம் தேதி பார்சிலோனாவிலிருந்து புறப்பட்டு மறுநாள் Changi விமானம் நிலையம் வந்தடைந்தார்.

அதே நாளன்று சிட்னி புறப்பட்ட அந்த நபர், transit பகுதியிலேயே இருந்ததாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் விமான நிலையத்தை விட்டு அவர் எங்கும் செல்லாததால் , சமூகத்தில் குரங்கம்மை பரவு அபாயம் இல்லை என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!