Latestஉலகம்

சிறந்த இலக்கிய பேச்சாளர் தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்

சென்னை, ஆக 18 – சிறந்த இலக்கிய பேச்சாளரும் , தமிழ் அறிஞராகவும் , பட்டிமன்ற நடுவராகவும் விளங்கிய ” தமிழ்க் கடல்” நெல்லை கண்ணன் இன்று தமது வீட்டில் காலமானார். 77 வயது நிரம்பிய அவர் வயது மூப்பு மற்றும் நோய் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்தார். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பெருந்தலைவர் காமராஜின் தீவிர பற்றாளராக விளங்கி வந்த கண்ணன் காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் தொண்டராகவும் இருந்து வந்தார். 1970 ஆம் ஆண்டு முதல் மேடைகளில் அவர் இலக்கிய உரையாற்றி வந்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றிய பெருமையும் நெல்லை கண்ணனுக்கு உண்டு. அண்மையில் தமிழக அரசின் இளங்கோ அடிகள் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் , தமிழ் அறிஞர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!