Latestஉலகம்

‘யாருடைய அறிவார்ந்த யோசனை இது?’; சீனாவில், ஓட்டுனர்களை விழித்திருக்க செய்ய பொருத்தப்பட்டிருக்கும் ‘சோர்வு எதிர்ப்பு’ விளக்கிற்கு குவியும் கண்டனம்

சீனா, நவம்பர் 17 – சீனாவில், இரவில் வாகனமோட்டிகள் தூங்கி விழாமல் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வத்ஜை உறுதிச் செய்யும் வகையில், “அதிவேக சோர்வு எதிர்ப்பு லேசர் விளக்குகளை” அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அந்த விளக்கின் ஒளிரும் தன்மை, இரவு நேர ஓட்டுனர்கள் விழிப்புடன் இருக்க உதவுமென கூறப்படுகிறது.

இரவு நேரத்தில், அந்த விளக்குகள் ஒளியை கக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியை ஒன்று வைரலாகி, சமூக ஊடகங்களை வலம் வருகின்றன.

அந்த காணொளியை இதுவரை ஆறு கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை; 27 ஆயிரம் முறை அது பகிரப்பட்டுள்ளது.

வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் அந்த விளக்குகளை சிலர் வரவேற்றுள்ள வேளை; பலர் அதற்கு எதிர்மறையான கருத்துகளையும், கண்டனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

“பார்வைக்கு கேடு விளைவிக்கும் அந்த விளக்குகளை பொறித்தும் யோசனையை எந்த அறிவாளி தந்தது” என இணைய பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“உண்மையில் அறிவியல் பூர்வமாக தான் அந்த யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளதா? பிரச்சனைக்கான காரணத்தை கண்டுபிடியுங்கள், தற்காலிக தீர்வை வழங்காதீர்கள்” என மற்றொருவர் சாடியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!