Latestமலேசியா

சிலாங்கூரில் மேலும் இரு மின் சுடலை வசதிகள் -மந்திரிபெசார் அமிருடின் ஷாரி

ஷா அலாம், ஜூலை 19- கோவிட் தொற்றின் பாதிப்பினால் இறந்த இஸ்லாமியர் அல்லாதவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு சிலாங்கூரில் மேலும் 2 மின்சுடலைகள் ள் விரைவாக ஏற்பாடு செய்யப்படும். சிலாங்கூர் மந்திரிபுசார் Amirudin Shari இதனை தெரிவித்தார். இப்போதைக்கு கிள்ளான் சிம்பாங் லீமாவில் ஒரு மின்சுடலை மட்டுமே உடல்களை தகனம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

கிள்ளான் நகரான்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிம்பாங் லீமாவில் இதர இரண்டு மின் சுடலைகள் பழுதடைந்ததால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை என Amirudin Shari தெரிவித்தார். மேலும் இரண்டு மின் சுடலைகளை அதிகரிக்க விரும்புகிறோம். தனியாரிடம் மின்சுடலை இருந்தாலும் தகனம் செய்வதற்கு அதிகமான மின்சுடலைகள் இல்லை.

அதிக செலவு இல்லாமல் விரைவாக உடல்களை தகனம் செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னார். சிம்பாங் லீமா மின்சுடலை கிள்ளான் நகரான்மைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அதன் நிர்வாகத்தில் அரசு சார்பற்ற இயங்களின் உதவியும் தேவையென தாம் வலியுறுத்த விரும்புவதாக Amirudin Shaari தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!