Latestமலேசியா

Dewan Bahasa dan Pustaka-வில் உலக தாய்மொழி நாள் கொண்டாட்டம்; 21 பிப்ரவரி அதிகாரப்பூர்வத் தொடக்கம்

கோலாலம்பூர், பிப் 15 – உலகில் தோன்றி, நம்முள் வாழும், நமக்குப் பிறக்கும், வாழப்போகும் ஒவ்வொருவரும் தாய் மொழியை போற்றி வணங்க வேண்டும் என ஆண்டு தோறும் பிப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆய்வு மேம்பாட்டு அறவாரியமான, தமிழ் அறவாரியம் பல அமைப்புகளுடன் இணைந்து இவ்வருடமும் தாய்மொழி தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளது.

ஏறக்குறைய 14 வருடங்களாக பல அமைப்புகளுடன் இணைந்து மலேசிய தமிழ் அறவாரியம் தாய்மொழி தினத்தை மலேசியாவில் கொண்டாடி வருவதாக தமிழ் அறவாரியத்தின் தலைவர் இளஞ்செழியன் வேணுகோபால் தெரிவித்தார்.

இதனிடையே இவ்வாண்டு நடைபெறவுள்ள தாய்மொழி தினத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்கான சிறப்பு நிகச்சி எதிர்வரும் பிப்ரவரி 21ஆம் திகதி காலை 9 மணியளவில் டேவான் பஹாசா மற்றும் புஸ்தகாவில் நடைபெறவுள்ளது.

அன்றைய நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டும் போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படும் என கூறுகின்றார் அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் குகனேஸ்வரன்.

தாய்மொழி தினத்தை முன்னிட்டு 2 மாதங்களுக்கு நடைபெறவுள்ள போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக தாய்மொழி தினம் அதற்கென்று உரிய பண்பாட்டுப் பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ்வதற்காக ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், இளையோர்கள், பெரியோர்கள் என அனைவரும் திரளாக வந்து கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!