
கோலாலம்பூர், மே 23 – சிலாங்கூர் FC அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் Ahmad Khuzaimi பையின் வீட்டில், நேற்று மாலை கொள்ளையிடப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று நண்பகல் மணி இரண்டு வாக்கில், Khuzaimi பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியேறியதாக, அவர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இரவு மணி ஒன்பதுக்கு வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன் மற்றும் பின்புற கதவுகள் திறந்து கிடப்பதை அவர் கண்டுள்ளார்.
அச்சம்பவத்தில், அவரது யமஹா மோட்டார் சைக்கிள் ஒன்றும், வெவ்வேறு முத்திரைகளை கொண்ட நான்கு நாணய பணப் பைகளும், கடப்பிதழும் களவுப்போனதாக Khuzaimi கூறியுள்ளார்.
மலேசிய காற்பந்து லீக், அதன் விளையாட்டாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என கடந்த வாரம் FAM எனும் மலேசிய காற்பந்து சங்கம் கேட்டுக் கொண்டிருந்தது.
குறிப்பாக, அண்மையில் காற்பந்து வீரர்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னர், அது அவசியம் என FAM துணைத் தலைவர் Yusoff Mahadi வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.