Latestமலேசியா

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி நிலையிலான டான் ஶ்ரீ எஸ். ஏ விக்னேஸ்வரன் காற்பந்து போட்டி

சுங்கை சிப்புட், ஜூன் 13 – பள்ளிக்கூட புறப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பால், இந்திய இளைஞர்களை ஆரோக்கியமான நடவடிக்கைகளில் குறிப்பாக காற்பந்து விளையாட்டில் ஈடுபட வைக்கும் முயற்சியாக, மஇகா, டான் ஶ்ரீ எஸ். ஏ விக்னேஸ்வரன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியை நடத்தி வருகின்றது.

அவ்வகையில், நேற்று வார இறுதி நாளில், பேராக் சுங்கை சுப்புட் நாடாளுமன்ற தொகுதி நிலையிலான காற்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த காற்பந்து போட்டி, சுங்கை சிப்புட் வட்டாரத்தைச் சேர்ந்த பல்லின மக்களை ஒன்றிணைய வைக்கும் ஒரு முயற்சியாகவும் அமைந்ததாகக் கூறினார் , அப்போட்டியைத் தொடக்கி வைத்த மஇகா தேசிய தலைவர் டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்.

குவாலா கங்சார் நகராண்மைக் கழக திடலில் நடைபெற்ற டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரமன் சுழற்கிண்ண போட்டியில் மொத்தம் 56 அணிகள் களம் கண்டன.

அதன் இறுதியாட்டத்தில் Super Sunday அணி, Bell United அணியை 2- 0 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தி, கிண்ணத்தை வென்றதோடு, 5,000 ரிங்கிட் பரிசுப் பணத்தையும் தட்டிச் சென்றது.

இரண்டாவதாக வந்த Bell United , 3,000 ரிங்கிட் பரிசுத் தொகையையும், மூன்றாவது நான்காவது இடங்களில் வந்த Santeh Tiger, KPBSS FC அணி முறையே, 2,000 ரிங்கிட்டையும் 1,000 ரிங்கிட்டையும் தட்டிச் சென்றன.

பல்லினத்தைச் சேரந்த உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்புடன் மிக சிறப்பாக நடைபெற்ற அந்த காற்பந்து போட்டியை, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற ம.இ.கா சேவை மையமும் சுங்கை சிப்புட் பொது இயக்கங்களும் ஏற்பாடு செய்திருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!