Latestஉலகம்

சேலத்தில் 146 அடி உயரத்தில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை

சேலம், ஏப் 6 – சிலாங்கூர் பத்துமலை குகையின் அடிவாரத்தில் உள்ள முருகன் சிலை, உலகின் மிக உயரமான முருகன் திருவுருவமாக விளங்கிய வேளை அந்த பெருமையை தற்போது, தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் ஆலயம் பெற்றுள்ளது.

பத்துமலை முருகன் ஆலயத்தின் உயரம் 142 அடியாக இருக்கும் நிலையில், புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட முத்துமலை முருகனின் உயரம் 146 அடியாகும்.

இன்று காலை அம்முருகக் கடவுளுக்கு குடமுழக்கு விழா மிக கோலாகலமாக நடந்தேறியது.

இந்த ஆலயத்தின் திருப்பணிகள் 2016 -இல் தொடங்கிய வேளை , முருகனின் ஆறுபடை வீடுகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு சிலையை வடிவமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மலேசியாவில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜர் ஸ்தபதி குழுவினரே இந்த முருகன் சிலையையும் வடிவமைத்திருக்கின்றனர்.

3 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இம்முருக சிலையின் சிறப்பம்சமாக, சிலைக்கு அருகிலேயே மின்தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழி பக்தர்கள் மேலேறி முருகனின் திருமுகத்தை அருகில் காண்பதோடு, கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகமும் செய்யலாம்.

ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக சேலத்திம் இந்த முத்துமலை முருகன் எழுந்தருளியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!