Latestமலேசியா

தினசரி கோவிட் தொற்று தொடர்ந்து 5,000-கும் மேல் பதிவு

கோலாலம்பூர், ஜூன்  28 – நாட்டில்  கோவிட் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஐயாயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகின்றது.
கடந்த  24 மணி நேரத்தில் 5, 218 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார  தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையுடன் நாட்டில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை  ஏழு லட்சத்து 39 ஆயிரத்து  266 –ஐ எட்டியுள்ளது.

இதனிடையே, புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில், 1,989 பேர்  சிலாங்கூரில் வசிப்பவர்கள் ஆவர்.

நெகிரி செம்பிலானில்  629 பேருக்கும், கோலாலம்பூரில்  469 பேருக்கும்,  சரவாக்கில்  409 பேருக்கும்,  பேராக்கில்  400  பேருக்கும் கோவிட்  தொற்று கண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!