
கோலாலம்பூர், மார்ச் 3 – கோவிட்-19 தொற்றுக்கான விபரங்களை வெளியிடும் முறையை சுகாதார அமைச்சு மாற்றியுள்ளது.
மார்ச் முதலாம் தேதியிலிருந்து, தினசரி மரண எண்ணிக்கை , கடந்த 72 மணி நேரத்தில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையையே காட்டுமென , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த புதிய முறையின் கீழ் தினசரி கோவிட் மரண எண்ணிக்கை உயர்வாக பதிவாகும். உதாரணத்திற்கு நேற்று 115 மரணங்கள் பதிவாகின. அந்த மரணங்கள் ஒரே நாளில் நிகழ்ந்தவை அல்ல. அந்த எண்ணிக்கையில் 62 மரணங்கள் 72 மணி நேரத்திற்குள் நிகழ்ந்தவை என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.