Latestமலேசியா

தீவிபத்தில் 900 பேர் வீடுகளை இழந்தனர்

செம்பூர்னா, ஏப் 21, Sabah, Kampung Bangau -Bangau -வில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் 100 வீடுகள் அழிந்தன. இதனால் அந்த வீடுகளில் தங்கிருந்த 900 பேர் பாதிக்கப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் விரைந்து ஈடுபட்டனர். இதனால் தீ இதர வீடுகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு Kampung Bangau -Bangau நீர்ப் பகுதியில் இருந்த வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக கட்டப்பட்ட வீடுகளில்தான் நேற்றிரவு தீ பற்றியது.

இந்நிலையில் நிகழ்ந்த அந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையென Semporna தீயணைப்பு நிலையத்தின் தலைவர் Edoen Macheal தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!