Latestவிளையாட்டு

ஜெர்மனின் பிரபல காற்பந்து நட்சத்திரம் பெக்கன்பவர் காலமானார்

பெர்லின் , ஜன 9 – 1974 ஆம் ஆண்டில் ஜெர்மன் காற்பந்து குழு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அதன் நட்சத்திர ஆட்டக்காரரும் கேப்டனும், 1990 ஆண்டின் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் மீண்டும் ஜெர்மன் வெற்றிபெற்றபோது குழுவின் நிர்வாகியாகவும் பணியாற்றிய பெக்கன்பவர் காலமானார். அவர் தமது 78 வயதில் நேற்று இறந்தார் என ஜெர்மன் காற்பந்து சங்கம் அறிவித்தது. 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஜெர்மனி மற்றும் பேயர்ன் முனிச் கிளப்பில் முக்கிய ஆட்டக்காரராக பெக்கன்பவர் திகழ்ந்தார். அதோடு அவர் மேற்கு ஜெர்மனி குழுவின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவர் மேற்கு ஜெர்மனி குழுவுக்கு 103 முறை விளையாடியுள்ளார்.

1972ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ண காற்பந்து போட்டியிலும் மேற்கு ஜெர்மனி குழுவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் இங்கிலாந்து குழுவிற்கு எதிரான இறுதியாட்டத்திலும் அவர் விளையாடியுள்ளார். விளையாட்டாளராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றிய காலக்கட்டத்தில் உலகக் கிண்ணத்தை வென்ற உலகின் மூன்று ஆட்டக்காரர்கள் வரிசையில் பெக்கன்பவரும் ஒருவராவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!