Latestஉலகம்மலேசியா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்துவீர் ;பிரதமருக்கு பக்காத்தான் வலியுறுத்து

கோலாலம்பூர். மே 27- கட்சித் தாவலுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் நடத்தும்படி பிரதமர் Ismail Sabri-க்கு பக்காத்தான் ஹரப்பான் அறைகூவல் விடுத்துள்ளது. அந்த உத்தேச மசோதாவை தாக்கல் செய்யும் கடப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக பல முறை Ismail Sabri தெரிவித்துள்ளதால் இதற்காக இனியும் காத்திருக்கக்கூடாது என பக்காத்தான் தலைவர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியது. கட்சித் தாவலை தடுக்கும் மசோதா எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என கடந்த மாதம் Ismail Sabri கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!