
கோலாலம்பூர், டிசம்பர் 2 – 1MDB நிறுவனம் விட்டுச் சென்ற கடன் சுமை இன்னும் நாட்டின் மிகப்பெரிய நிதிப் பாரமாக உள்ளதென்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கருத்துரைத்துள்ளார்.
கடந்த 2018 முதல் இதுவரை அரசு சுமந்து வரும் மொத்தக் கடன் கிட்டத்தட்ட 50 பில்லியன் ரிங்கிட் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
1MDB-யின் நிலுவைக் கடன் 34 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் நிலையில், அதன் வட்டி 17 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. ஆக மொத்தம் 50 பில்லியன் ரிங்கிட் கடன் சுமையை நாடு எதிர்நோக்கி வருகின்றது.
இதுவரை அரசு 1MDB தொடர்பான 42 பில்லியன் ரிங்கிட் கடனை அடைத்துள்ளது. அதேசமயம், வழக்குத் துறைகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் முயற்சியால் 29 பில்லியன் ரிங்கிட் மீண்டும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இருந்தபோதும் இன்னும் நிலுவையில் உள்ள கடனைத் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதென நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர் தெரிவித்துள்ளார்.



