
கோலாலம்பூர், ஏப்ரல் 23 – நாட்டின் மக்கள் தொகையில் நேற்றுவரை மொத்தம் 68 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 60 லட்சத்து 3,461 பெரியோர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
2 கோடியே 29 லட்சத்து 63,644 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ள வேளை 2 கோடியே 32 லட்சத்து 40,584 முதல் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என CovidNow அகப்பக்கம் தகவல் தெரிவித்தது.
12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 28 லட்சத்து 83,331 இளைஞர்கள் தடுப்பொசியைப் போட்டுகொண்டுள்ளனர். அதே வேளை, 29 லட்சத்து 83,700 இளைஞர்கள் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.