
கோலாலம்பூர், டிசம்பர் 2 – UPM பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் பட்டம் பெற்ற அடுத்த வினாடியே, மூர்ச்சையாகி மயங்கி விழுந்த மாதுவிற்கு முதலுதவி செய்த மருத்துவ பட்டத்தாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மருத்துவ பட்டம் பெற்ற Muhammad Husni Abu Bakar எனும் அந்த இளம் மருத்துவர், பெண்மணி மயங்கி விழுந்ததைக் கண்டவுடன் கையிலிருந்த பாராட்டு மலர் கொத்துக்களை தூர போட்டு விட்டு காலந்தாழ்த்தாமல் உடனடியாக அவசரச் சிகிச்சை அளிக்க தொடங்கினார்.
அவசர மருத்துவ முறையை கையாண்டு அவரின் சுவாசத்தைச் சீர்செய்து, நரம்புத் துடிப்பு முதல் அனைத்தையும் மருத்துவர் வேகமாக மதிப்பிட்டார்.
COVID-19இல் தந்தையை இழந்ததிலிருந்து மருத்துவத்தில் சேவை செய்யும் உறுதியை வாழ்க்கை நோக்கமாகக் கொண்டவர்தான் மருத்துவர் Muhammad Husni.
அவரின் அந்த மனிதநேயச் செயல், UPM பட்டமளிப்பு விழாவை மேலும் பிரகாசிக்க செய்தது.



