Latestமலேசியா

பானத்தில் போதைப் பொருள் கலந்து பாலியல் வன்முறை ; 2 ஆடவர்கள் சரண்

கோலாலம்பூர், நவ  21 – கேளிக்கை மையமொன்றில் குதூகலமாக இருந்த பின்னர்,     பெண் ஒருவரை பாலியல் வன்முறை செய்தது தொடர்பில் இரு உள்ளூர் ஆடவர்கள் தாங்களாகவே, நேற்று  புத்ரா ஹைட்சில் ( Putra Heights)  உள்ள  போலீஸ் நிலையத்தில் சரணடந்தனர்.

31  வயது , 38 வயதுடைய அவ்விரு ஆடவர்களும்  நேற்று மாலை சரணடைந்ததாக, கோலாலம்புர் போலீஸ் தலைமையகத்தின்  குற்றப் புலனாய்வு துறையின் துணை தலைவர் கமாரூசாமான் எலியாஸ் தெரிவித்தார்.

கேளிக்கை விடுதியில் பானத்தில் போதைப் பொருளைக் கலந்தப் பின்னர் மயக்கமடைந்த  பெண்ணை , அவரது இரு நண்பர்கள் பல முறை பாலியல் வன்முறை செய்ததாக ,   பாதிக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய நண்பர்  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

வைரலான அந்த பதிவில், பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது நண்பர்கள்  தலைநகரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று  அங்குள்ள அறையில் பாலியல் வன்முறை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும்  தான் பாலியல் வன்முறை செய்யப்பட்டது அந்த  பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட   நண்பர்கள்  கூறியப்  பின்னரே  தெரிய வந்ததாகவும்  கூறப்பட்டுள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!