Latestஇந்தியாசினிமா

நடிகர் விஜயகாந்த் காலமானார்

சென்னை , டிச 28 – தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரமாகவும் தேமுதிக கட்சியை தோற்றுவித்தவருமான விஜயகாந்த் காலமானார். நேற்று முன் தினம் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 71 வயது விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுவாசிப்பதில் சிரமம் எதிர்நோக்கியதால் அவருக்கு சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் இன்று இறந்து விட்டார் என மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. விஜயகாந்தின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளது.

கருப்பு எம்.ஜி.ஆர் என பலராலும் போற்றப்பட்டு மிகவும் அன்புக்குரியவர் என வருணிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் மரணம் தமிழகத்தைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்த திரையுலையாக பிரபலங்கள் உட்பட பலரும் அவரது வீட்டில் கூடியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!