
கோலாலம்பூர், மார்ச் 8 – ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும் , கெடா மாநில ம.இ.கா தொடர்பு குழுத் தலைவருமான டத்தோ டாக்டர் எஸ். ஆனந்தன் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவர்களின் அரசியல் செயலாராக இன்று காலை அவரது பதவி பிரமானம் எடுத்துக்கொண்டார்.
முன்னாள் மேலவை உறுப்பினருமான ஆனந்தன் ம.இ.கா மட்டுமின்றி தேசிய முன்னணியின் இதர உறுப்பு கட்சிகளான அம்னோ, ம.சீசவுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளார். மனித வள அமைச்சின் கீழ் HRDF தொழில்துறை பயிற்சிக்கான துணை தலைராகவும் அவர் தற்போது இருந்து வருகிறார்.
மேலும் இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற இயக்கங்களுடன் நல்ல அணுக்கமான நட்புறவையும் அவர் கொண்டுள்ள அவருக்கு இந்திய சமூக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தம்மை இந்த பொறுப்புக்கு பரிந்துரை செய்த ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரனுக்கும் மற்றும் ம.இ.காவின் துணைத்தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருக்கும் ஆனந்தன் நன்றி தெரிவித்துக் கொண்டார். ம.இ.கா மற்றும் இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கும் அவர் உறுதிபூண்டுள்ளார்.