
பிரதமர் பதவிக்கால வரம்புச் சட்டம் முதலில் தற்போதைய பிரதமரான எனக்கும் பொருந்தும்-அன்வார்
குவாலா லாங்காட், பிப்ரவரி 20 –
பிரதமர் பதவிக்காலத்தை வரையறுக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டால், அது முதலில் தமக்கே பொருந்தும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று கம்போங் ஸ்ரீ சீடிங் பள்ளிவாசலில் (Masjid Kampung Seri Cheeding) வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், “இந்த சட்டம் பிறருக்காக மட்டுமே அல்ல; முதலில் எனக்கு பொருந்த வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்கால வரம்பு உடனடியாக அமலுக்கு வருமா அல்லது பின்னர் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகளாக வரையறுக்கும் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று அன்வார் முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



