Latestமலேசியா

புதிய பள்ளித் தவணையின் முதல் வாரம் ; கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது

புத்ராஜெயா, மார்ச் 4 – புதிய கல்வி தவணை தொடங்கிய முதல் வாரத்தில், கற்றல் – கற்பித்தலை இல்லை எனும் அணுகுமுறையை கல்வி அமைச்சு தொடர்ந்து பின்பற்றும்.

பள்ளி தொடங்கிய முதல் வாரத்தில், மாணவர்களை கவரும் நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென, கல்வி இயக்குனர் அஜ்மான் அட்னான் தெரிவித்தார்.

கடந்தாண்டு முதல் முறையாக அறிமுகம் கண்ட அந்த அணுகுமுறை, இனி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுமென அஜ்மான் சொன்னார்.

அதனால் முதல் வார்த்தில், பள்ளி தளவாடப் பொருட்களை சீர்படுத்துவது, புத்தகங்களை தயார் செய்வது உட்பட மாணவர்களை கவரும் நடவடிக்கைளை மேற்கொள்ளலாம் என்றாரவர்.

A பிரிவில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கான புதிய கல்வித் தவணை வரும் ஞாயிற்றுகிழமை தொடங்கும் வேளை ; B பிரிவு மாணவர்கள் வரும் திங்கட்கிழமை புதிய கல்வித் தவணையை தொடங்குவார்கள்.

அதே சமயம், ரமலான் மாதம் முழுவதும், பள்ளி சிற்றுண்டிச் சாலைகளை மூட வேண்டியதும் இல்லை என அஜ்மான் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!