Latestஉலகம்

புத்தாண்டு தினத்தன்று தாய்லாந்தில் 73 பேர் மரணம்; 574 பேர் காயம்

பேங்காக், ஜன 4 – பொதுவாகவே, பெரும்பாலான உலக மக்கள் ஆரவாரத்துடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் வரவேற்கும் புத்தாண்டுகள் விபத்து, மரணம் போன்ற காரணங்களால் ஒரு சிலருக்குப் பெரும் சோகமாக மாறிவிடுவதை மறுக்க முடியாது.

அந்த வகையில், தாய்லாந்தில் புத்தாண்டு தினத்தில் (ஜன 1) மட்டும் சாலை விபத்தால் 73 பேர் மரணம் அடைந்திருப்பதோடு 574 பேர் காயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு சாலை விபத்து தடுப்பு மற்றும் குறைப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் தாய்லாந்தில் புத்தாண்டை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை கிட்டதட்ட அங்கு 1,906 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாகவும், அதில் 226 பேர் உயிரிழந்ததாகவும் நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதில், பெரும்பாலான விபத்துகள் மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்டதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!