Latestஉலகம்

பெண்கள் மீதான கட்டுப்பாடு அதிகரிப்பு தலிபான் அரசை ஜி 7 அமைப்பு சாடியது

பெர்லின், மே 13 – தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பெண்களுக்கு எதிராக அதிகமான கட்டுப்பாடுகள் விதித்துவருவது குறித்து
ஜி 7 தொழில்மய நாடுகளின் அமைப்பு சாடியது. இஸ்லாமிய தீவிரவாத தரப்பினர் அந்த நாட்டை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர் என G 7 இயக்கம் குற்றஞ்சாட்டியது. பெண்கள் மற்றும் இளம் பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் செயல் நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெர்லினில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் வெளயுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகக்கடைசியாக பெண்களும் ஆணகளும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்வதற்கு தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!