
கோலாலம்பூர், செப் 15 – பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி கட்டுப்பாட்டிலான நான்கு மாநில அரசாங்கங்களுக்கான அதிகாரப்பூர்வமற்ற தலைவராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இருந்துவருவார். 4 மாநில அரசாங்கம் அல்லது SG4 என்றழைக்கப்படும் அந்த மாநில அரசாங்கங்களுக்கான செயல் நடவடிக்கை திட்டம் குறித்து கிளந்தான், திரங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் மந்திரிபுசார்கள் விவாதிப்பார்கள் என திரெங்கானு மந்திரிபுசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமகட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார். இந்த நான்கு மாநிலங்களும் ஆக்கப்பூர்வமாக நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மகாதீர் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார் என அவர் தெரிவித்தார்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடையே தொடர்பை ஏற்படுத்தும் பங்கையும் டாக்டர் மகாதீர் ஆற்றுவார் என அவர் தெரிவித்தார்.
SG 4 மாநிலங்களுக்கிடையே கொள்கை அளவில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு பெர்லீஸ், கெடா ,கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களின் மந்திரிபெசார்களுக்கிடையே ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான டாக்டர் அகமட் சம்சூரி மொத்தார் கூறினார்.