Latestஉலகம்மலேசியா

பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து பகிரங்கமாக விவாதிக்கப்படாது – பிரதமர் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 16 – பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து இனி பகிரங்கமாக விவாதிக்கப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob தெரிவித்தார். அந்த விவகாரம் தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டால் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழ்நிலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் இப்போதைய முக்கிய கவனம் பொருளாதாரத்தை மீட்சிக்கு கொண்டு வந்து வாழ்க்கை செலவினம் மற்றும் உணவுப் பொருள் விலையேற்ற பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் என Ismail Sabri விளக்கம் அளித்தார்.

இதற்கு முன் இருந்த அனைத்து முன்னாள் பிரதமர்களும் பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து பகிரங்கமாக விவாதிக்கவில்லை. அரசியல் நிலைத்தன்மையற்ற சூழ்நிலை உருவாகும் என அவர்கள் அறிந்திருந்ததே இதற்கான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார். சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியானபோதிலும் அரசாங்கத்தில் தமது நிலையில் கேள்வி எதுவும் எழவில்லையென Ismail Sabri கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!