Latestமலேசியா

மக்காவ் மோசடி: 350,000 ரிங்கிட்டைப் பறிகொடுத்தார் பணி ஓய்வு பெற்ற மாது

பாப்பார், ஆகஸ்ட் 24 – சபா, பாப்பார் (Papar)ரில் பணி ஓய்வு அரசு ஊழியரான மாது ஒருவர், தனது மூன்றரை லட்சம் ரிங்கிட் சேமிப்புப் பணத்தை மக்காவ் மோசடி கும்பலிடம் பறிகொடுத்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி, இணையம் மூலம் பொருள் வாங்கியிருப்பதாகக் கூறி அந்த 62 வயது மாதுவுக்குக் SMS குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குறுஞ்செய்தியில் வந்த தொலைபேசி எண்களுக்கு அழைத்த அம்மாது, தம்மை வங்கி அதிகாரி எனக் கூறிய நபரை நம்பி, அவர் கேட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் கொடுத்துள்ளார்.

பின்னர் கடந்த 20ஆம் தேதி தான் அவரது வங்கியில் இருந்த மூன்றரை லட்சம் ரிங்கிட் பணம் மூன்றாம் தரப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டிருப்பதையே அம்மாது அறிந்ததாக, பாப்பார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சுப்ரிண்டண்டன் கமாருடின் அம்போ சாக்கா (Kamaruddin Ambo Sakka) தெரிவித்தார்.

இதுபோன்று முன்பின் அறியாத எண்களில் இருந்து வரும் தகவல்களுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் கூறுவதைத் தவிர்க்கும்படி அவர் பொது மக்களுக்கு ஆலோசனை கூறினார். மோசடி கும்பல்கள், தற்போது பல யுக்திகளைக் கையாள்வதால், பொது மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!