Latestமலேசியா

மருத்துவ பட்டதாரிகள் தொடர்ந்து அரசு சேவையில் நீடித்திருக்கும் விவகாரத்தில் இன்றைய நாடாளுமன்ற கூட்டம் கவனம் செலுத்தும்

கோலாலம்பூர், பிப் 28 – அடுத்த ஆண்டு   அமல்படுத்தவிருக்கும்   பொதுச் சேவைத்துறைக்கான புதிய   சம்பள திட்டத்தை தொடர்ந்து    ஓய்வூதியம்    ரத்துச் செய்யப்படுவதால் மருத்துவ பட்டதாரிகள் பொதுச் சேவைத்துறையில் தொடர்ந்து  சேவையாற்றிவருவதை கவர்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து இன்றைய நாடாளுமன்ற கூட்டம்  கவனம் செலுத்தும் .   வாய்மொழி  கேள்விக்கு  பதில்  தெரிவிக்கும்     இன்றைய  நாடாளுன்ற நடவடிக்கையில்   சுகாதார அமைச்சர்  டத்தோஸ்ரீ  Dzulkefly Ahmad ட்டிடம்   Kuala Nerus   பெரிக்காத்தான் நேசனல் உறுப்பினர்  டத்தோ டாக்டர்  Alias Razak  கேள்விகளை  கேட்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் நாட்டில்     2025ஆம் ஆண்டிற்குள்  10,000 மின்சார கார்களுக்கான பெட்டரி  சார்ஜ்  செய்யும்    மையங்களுக்கு இலக்கை கொண்டிருக்கும்  அரசாங்கம்  அதனை எப்படி  அமல்படுத்தவிருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு  அனைத்துலக  வாணிக தொழில்துறை அமைச்சர்   Tenku   Zafrul tengku    Abdul Aziz    விளக்கம் அளிப்பார்.   வாய்மொழி கேள்விகள் மற்றும் அதற்கு பதில் அளிக்கும் அங்கம் முடிவுற்ற கையோடு  அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும்  விவாதங்கள் இன்றறைய நாடாளுமன்ற கூட்டத்தில் தொடரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!