Latestமலேசியா

முகநூல் வாயிலாக இஸ்லாத்தை அவமதித்தார்; தனித்து வாழும் தாய்க்கு 8,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – முகநூல் வாயிலாக இஸ்லாத்தை அவமதிக்கும் கருத்துக்களைப் பதிவேற்றியதை ஒப்புக் கொண்ட தனித்து வாழும் தாய் ஒருவருக்குக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் எண்ணாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணி புரியும் 34 வயது ஹோங் ஜியா மிங் (Hong Jia Ming) எனும் அம்மாது, ஈராண்டுகளுக்கு முன்பு அக்குற்றத்தைப் புரிந்திருந்தை ஒப்புக் கொண்டார். அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஜியா மிங் 6 மாத சிறைத்தண்டனை அனுபவித்தாக வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொழுகை செய்தால் Covid-19 நெருங்காது என எத்தனை முட்டாள்கள் நினைக்கிறீர்கள்? என முகநூலில் கருத்தைப் பதிவேற்றி, பிறர் மனதைப் புண்படுத்தும் செயலில் அவர் ஈடுபட்டிருந்தார். அதோடு அதற்கென வாக்குப்பெட்டியை உருவாக்கி, முட்டாள்தனமானது, ஆதரிக்கிறேன் என எழுதி வாக்குச் சேகரிக்கும் செயலிலும் அவர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!