Latestமலேசியா

இந்துக்களின் மனதைப் புண்படுத்தி வரும் சம்ரி வினோத் மீது உடனடி நடவடிக்கைத் தேவை- ம.இ.கா வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 29 – இந்து சமயம் குறித்து சமூக ஊடகங்களில் சம்ரி வினோத் தொடர்ந்து பேசி வருவது இந்நாட்டு இந்தியர்கள் குறிப்பாக இந்துக்களின் மனதைப் புண்படுத்தி வருகிறது.

எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, ம.இ.கா வலியுறுத்தியுள்ளது.

சம்ரி வினோத் மீது ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ள போதும், அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுத்தப்பாடில்லை; இது அமுலாக்கத் துறை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் தீனாளன் டத்தோ டி.ராஜகோபாலு அறிக்கையொன்றில் கூறினார்.

3R எனப்படும் மதம்-இனம்-ஆட்சியாளர்கள் குறித்து பேசியதற்காக சம்ரி வினோத் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டே வேண்டும் என தீனாளன் திட்டவட்டமாகக் கூறினார்.

சம்ரி வினோத்தைப் போலவே, பல்லின மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் N.கணேஸ்பரன் மீதும் நடவடிக்கை வேண்டும் என ம.இகா. வலியுறுத்துகிறது.

ஜெர்மனியில் பதுங்கிக் கொண்டு மலேசியர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் கணேபரனின் குடியுரிமை ரத்துச்செய்யப்பட வேண்டும் என்றும் தீனாளன் வலியுறுத்தினார்.

இது போன்ற தீவிரவாத சிந்தனையுடையவர்களால் நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தான் கெடுதல் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!