Latestமலேசியா

ரவின் குமர் உட்பட10 பேர் ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராக பதவியேற்றனர்

ஜோகூர் பாரு, மார்ச் 26 – ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் கே.ரவின்குமார் கிருஷ்ணசாமி உட்பட 10 பேர் இன்று ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அண்மையில் நடைபெற்ற ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் ரவின்குமார் Tenggaroh சட்டமன்ற தொகுதியை தற்காத்துக் கொண்டார். Johor Baru , Istana Bukit Serene-வில் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் முன்னிலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி உறுதிமொழி சடங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் Tunku Mahkota Johor Tunku Ismail, Tunku Temenggong Johor Tuanku Idris மந்திரிபெசார் டத்தோ Onn Hafiz Ghazi ஆகியோரும் கலந்து கொண்டனர். ரவின்குமார் கிருஷ்ணசாமியுடன் Buluh kasap சட்டமன்ற உறுப்பினர் Datuk Zahari Sarip , Bukit Permai சட்டமன் உறுப்பினர் Datuk Mohd Jafni Md Shukor, Serom சட்டமன்ற உறுப்பினர் Khairin Nisa Ismail, Larkin சட்டமன்ற உறுப்பினர் Mohd Hairi Mad Shah , Semerah சட்டமன்ற உறுப்பினர் Mohd Fared Mohd Khalid ஆகியோர் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் Yong Peng சட்டமன்ற உறுப்பினர் Ling Tian Soon , Paloh சட்டமன்ற உறுப்பினர் Lee Ting Han, Bukit Pasir சட்டமன்ற உறுப்பினர் Mohamad Fazli Mohamad Salleh மற்றும் Johor Lama சட்டமன்ற உறுப்பினர் Norliza Noh ஆகியோரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். Machap சட்டமன்ற உறுப்பினரான டத்தோ Onn Hafiz Ghazi இம்மாதம் 15ஆம் தேதி ஜோகூர் மந்திரிபெசராக பதவியேற்றார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!