
குவந்தான், டிச 2 – Lipisஸில் ஐந்தாம் படிவம் படிக்கும் மாணவர் ஒருவர் SPM தேர்வு எழுதுவதற்காக வெள்ள நீரில் நீந்திச் சென்றது வைரலானதைத் தொடர்ந்து அம்மாணவர் பாதுகாப்புடன் இருப்பதாக பகாங் மாநில கல்வித் துறை (JPN) உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த மாணவரின் வீட்டிலிருந்து வெளியேறும் வழி மிகவும் விரைவாக வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால் பாதிக்கப்பட்ட அம்மாணவர் நவம்பர் 29ஆம் தேதி பள்ளி விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன் நீரில் கடந்து சென்றதாக
இன்று வெளியிட்ட அறிக்கையில் பஹாங் கல்வித்துறை தெரிவித்தது.
அந்த மாணவர் தற்போது Kuala Lanar தேசிய இடைநிலைப் பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்தோடு , அவர் பாதுகாப்பாகவும், மற்ற மாணவர்களுடன் தேர்வு எழுதத் தயாராகவும் உள்ளார்.
Lipis மாவட்டத்தைச் சுற்றியுள்ள தங்கும் வசதியைக் கொண்ட இடைநிலைப் பள்ளிகளுடன் இணைந்து, வெள்ள அபாயப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, மாநில கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் தொடக்க நிலையில் தற்காலிக திட்டத்தைத் தயாரித்தது.
அந்த மாணவர்கள் பள்ளி தங்கும் விடுதிகளில் தங்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் எந்தவொரு சிரமமின்றி SPM தேர்வை எழுதவேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



