Latestமலேசியா

வங்கி நடைப்பாதையில் வீடற்றவர் மோசமாக நடத்தப்பட்ட சம்பவம்; AmBank மன்னிப்புக் கோரியது

கோலாலம்பூர், நவம்பர்-26  – வீடற்ற ஓர் ஆடவர், தாமான் மலூரியில் உள்ள AmBank கிளை அலுவலகத்தின் நடைப்பாதையில் மோசமாக நடத்தப்பட்ட சம்பவத்துக்காக, அவ்வங்கி மன்னிப்பு கேட்டுள்ளது.

வங்கியின் பாதுகாவலர்கள் அவ்வாடவரைத் தள்ளி, தண்ணீரை பீய்ச்சியடித்து, கத்தி பேசும் காட்சி வைரலாகி, பொது மக்களின் கோபத்தை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், இப்படியான நடத்தை ஏற்றுக்கொள்ளப்படாது எனவும், வங்கி அளவில் உள் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் AmBank கூறியது.

இவ்வேளையில், பாதிக்கப்பட்ட ஆடவருக்கு, ஒரு நல்லுள்ளத்தின் முயற்சியில் தற்போது தங்குமிடம் கிடைத்துள்ளது.

கோலாலம்பூரில் வீடற்றவர்களுக்கு உணவளிக்கும் அரசு சாரா இயக்கத்தின் நிறுவனரான Tony Lian-னே அந்த நல்லுள்ளம் ஆவார்.

‘Uncle Tony’ என பரவலாக அறியப்படும் இவர், வைரலான வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவ்வாடவரைத் தேடி, அவருக்கு தங்குமிடத்தை வழங்கியுள்ளார்.

Safiudween என்ற 30 வயது அந்நபர் அண்மையில் தான் உணவகத்தில் உணவு பரிமாறும் வேலையை இழந்தாகவும், அதனால் உண்ண உணவின்றி போக வழியின்றி வங்கி நடைப்பாதையில் படுத்துறங்கியதாகவும் தம்மிடம் கூறியதாக Uncle Tony சொன்னார்.

இந்நிலையில் அவ்வாடவருக்கு சாப்பாடும் துணிமணியும் Tony கொடுத்துள்ளார்.

தவிர, வாழ்க்கைக்கு ஒரு வழியைத் தேடி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

அன்று பொறுப்பற்ற – மனிதநேயம் இல்லாதவர்கள் அவ்வாடவரை மோசமாக நடத்தினர்; இன்று கருணையும் அன்பும் உள்ள ஒரு நல்லுள்ளத்தின் அரவணைப்பை அவர் பெற்றுள்ளார்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!