Latestஉலகம்

வட கொரியாவில் கோவிட்டால் முதல் மரணம் ; ஆயிரக்கணக்கோருக்கு அறிகுறிகள்

பியோங்யாங்,மே 13 – நேற்று முதல் கோவிட் தொற்று சம்பவத்தை பதிவு செய்த வட கொரியா, அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர் இறந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

மேலும் 1 லட்சத்து 87,000 பேருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டிருப்பதாகவும், தனிமைப் படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறது.

வட கொரியா நேற்று தான், முதல் முறையாக நாட்டிற்குள் கோவிட் வைரஸ் பரவியிருப்பதாக கூறியிருந்த நிலையில், சில காலமாகவே அத்தொற்று அந்நாட்டிற்குள் பரவிவிட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!