Latestமலேசியா

வர்த்தக வளாகத்தில் 2 சூதாட்ட மையங்கள் முறியடிப்பு ; 9 பேர் கைது

கிள்ளான், ஜன 13 – வர்த்தக வளாகத்தில் அலுவலகம் தோற்றத்தில் செயல்பட்ட இரண்டு கணினி சூதாட்ட மையங்களை போலீசார் கண்டுப்பிடித்தனர். சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் D – செவன் எனப்படும் சூதாட்டம், குண்டர் கும்பல் மற்றும் விபச்சார துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கிள்ளானில் செயல்படும் வர்த்தக தொகுதியில் அந்த சூதாட்ட மையங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அந்த நடவடிக்கையின்போது உள்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட 9 பேருடன் வெளிநாட்டைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். அதோடு அந்த சூதாட்ட மையங்களிலிருந்து 26 கைதொலைபேசிகள், 15 மடிக்கணினிகள், 100.00 ரிங்கிட் ரொக்கம் மற்றும் பல்வேறு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் துணை Superintendan Zulami Zuber வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!