Latestமலேசியா

வாகனமோட்டும் அனுமதியைப் புதுப்பிக்க முதியோருக்கு புதிய நிபந்தனை ; போலீஸ் பரிந்துரை 

கோலாலம்பூர், செப் 24 – வயதானவர்கள் வாகனமோட்டும் அனுமதியைப்  புதுப்பிப்பதற்கு புதிய நிபந்தனை ஒன்றை அறிமுகப்படுத்தும்படி அரசாங்கத்திடம், போலீஸ் பரிந்துரையை முன் வைத்துள்ளது.

உடல் – உள ரீதியாக  ஓட்டுநர் சீராக உள்ளார் எனும்  மருத்துவரின்  ஆதாரத்துடன்,  வயதானவர்களின் வாகனமோட்டும் அனுமதியை புதுப்பிக்க நிபந்தனையாக வைக்கலாமென, புக்கிட் அமான்  போக்குவரத்து  அமலாக்க – விசாரணை துறையின் இயக்குநர் டத்தோ அசீஸ்மான் அலியாஸ் ( Datuk Azisman Alias) தெரிவித்தார்.

நாட்டில், எதிர்திசையில் வாகனமோட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில நேரங்களில் அந்த சம்பவங்கள் 60, 70 வயதுடையை முதியோரை  உட்படுத்தியதாக இருக்கும்.

முதியவர்கள், முதுமை மறதியால் சாலையின் தவறான பாதையில் செல்லக் கூடுமென  டத்தோ அசீஸ்மான் அலியாஸ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!