
ஜோகூர் பாரு, ஜூன் 14 – ஜோகூரில் வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுசரிக்கப்படும் வார இறுதி விடுமுறை நாட்களை மாற்றுவது குறித்து அம்மாநில அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது.
அம்மாநிலத்தில் தனியார் துறைகளிலும் அரசாங்க துறைகளிலும் அனுசரிக்கப்படும் இரு வேறு வார இறுதி விடுமுறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனக்குமுறல்கள் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக, ஜோகூர் மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார்.
பெற்றோர்களும் பிள்ளைகளும் வார இறுதி நாட்களை ஒன்றாக கழிக்க , அந்த விவகாரம் பரிசீலிக்கப்படுமென அவர் கூறினார்.
மக்கள் அமைதியாக வழிபடுவதற்காக, 2013 – ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி, தமது பிறந்தநாளை முன்னிட்டு , வார இறுதி விடுமுறை இனி வெள்ளி சனிக்கிழமைகளுக்கு மாற்றப்படுவதாக, ஜோகூர் சுல்தான் Sultan Ibrahim Sultan Iskandar அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.