Latestமலேசியா

ஶ்ரீலங்கா பொருளாதார நெருக்கடி; சமூக வலைத்தளங்கள் முடக்கம்

கொழும்பு, ஏப்ரல் 3- உணவு – எரிபொருள் பற்றாக்குறையை  கண்டித்து  நாட்டில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் வன்செயலாக மாறியதை அடுத்து, ஶ்ரீலங்க அரசாங்கம் 36 மணி நேர ஊரடங்கை விதித்திருப்பதோடு , சமூக வலைத்தளங்களையும் முடக்கியுள்ளது.

அந்நாட்டில் ஊரடங்கு சனிக்கிழமை முதல் அமலில் இருக்கும் நிலையில், பேஸ்புக், டிவிட்டர்,  இன்ஸ்தாகிராம் ஆகியவை முடக்கப்பட்டிருக்கின்றன.

வட்சாப்பும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக  கைபேசிய பயனர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவிடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ,  சந்தேகத்திற்குரிய நபர்களை  பிடி வாரண்ட் இன்றி கைது செய்ய  அப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக  பயன்படுத்தப்படும் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் ஶ்ரீலங்கா மோசமான நிதி  நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

இதனால் அந்நாட்டில் பாதி நாளுக்கும் மேல் மின் தடை ஏற்பட்டுள்ளதோடு,  உணவு- எரிபொருள் , மருந்து  தட்டுப்பாட்டினால்  மக்களின் சினமும் அதிகரித்துள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!