Latestமலேசியா

பொறியியலாளர் ஸ்ரீ கணேஷற்கு மரணம் விளைவித்தார் உள்ளூர் கலைஞர் எமர்ஜென்சி விஜேய்க்கு 12 ஆண்டு சிறை

கோலாலம்பூர், மார்ச் 25 – சிறு வயது முதல் தனது நண்பராக இருந்த ஒரு பொறியியலாளரான 42 வயதுடைய Seri Ganis Ganapathy Pillay Krishnan என்பவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக உள்ளூர் கலைஞரும் திரைப்பட இயக்குனருமான VJ Emergency க்கு இன்று ஷா அலாம் உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் முன்னாள் தலைவருமான Vijayan Palaniappan என்ற உண்மைப் பெயர் கொண்ட 46 வயதுடைய VJ Emervgency தனக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 304ஆவது விதியின் உட்பிரிவு ( a) வின் கீழ் மரணம் விளைவித்ததாக குறைக்கப்பட்ட குற்றச்சாட்டை இன்று ஒப்புக் கொண்டார்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து தண்டனையை அனுபவிக்கும்படி அவருக்கு நீதித்துறை ஆணையர் Roszianayati Ahmad உத்தரவிட்டார். இதற்கு முன் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரியிருந்தார். 12 சாட்சிகள் வாக்குமூலம் தெரிவித்ததைத் தொடர்ந்து குற்றச்சாட்டை குறைக்கும்படி VJ Emergency கோரியிருந்ததாக அவரது வழக்கறிஞர் டத்தோ N Sivanathan தெரிவித்தார். மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான VJ Emergency பல்வேறு தமிழ் பாடல்களைக் கொண்ட ஆல்பத்தையும் இதற்கு முன் வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!