
கோலாலம்பூர், பிப் 23 – தலைநகரில் உள்ள , Putra Ria அடுக்குமாடி குடியிருப்புக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அந்த குடியிருப்பின் நிர்வாகத்துடனும் , Air Selangor நிறுவனத்துடனும் சந்திப்பு நடத்தப்படுமென, தொடர்பு – இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கான 1 லட்சத்து 70,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான நீர் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதை அடுத்து, அப்பகுதிக்கான நீர் விநியோகத்தை , Air Selangor நிறுவனம் துண்டித்திருப்பதாக, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Fahmi Fadzil குறிப்பிட்டார்.
அதோடு, அந்த குடியிருப்பில் உள்ள 358 வீடுகளில் வசிப்பவர்கள் , குடியிருப்பின் நிர்வாகத்துக்கு, 24 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பராமரிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தாமல் இருக்கின்றனர்.
அதிகமானோர் அந்த கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதை அடுத்து, அப்பகுதி மக்களுடனும் சந்திப்பு நடத்தப்படுமென அவர் கூறினார்.