Latestமலேசியா

1 வயது 9 மாத பிள்ளைக்கு மின்னியல் சிகரெட்டை கொடுத்த தம்பதியர் மீது குற்றச்சாட்டு

செலாயாங், ஜூன் 10 – ஒரு வயது  ஒன்பது மாதமே நிரம்பிய தங்களது ஆண் பிள்ளைக்கு, VAPE –மின்னியல் சிகரெட்டை புகைக்க கொடுத்த கணவன் மனைவி இருவரும், இன்று  செலாயாங்  செஷ்ன்ஸ்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர்.

மகனை முறையாக கவனிக்கத் தவறியதாக, 23, 21 வயது மதிக்கத்தக்க அவ்விருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

வழக்குரைஞர் யாரும் பிரதிநிதிக்காத அந்த தம்பதியர் தங்களது குற்றச்சாட்டை மறுத்தனர்.

இவ்வேளையில், அவ்விருவரையும் தலா ஆறாயிரம் ரிங்கிட் உத்தரவாதத்தில் விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!