பாசீர் மாஸ், மே 6 – சுங்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 25ஆம்தேதியன்று ஷா அலாமிலுள்ள கிடங்கு ஒன்றில் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்தனர். தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து Rantau Panjang அமலாக்க குழுவினர் சுங்கத்துறையின் அதிரடி பரிசோதனை குழுவுடன் இணைந்து அந்த மதுபானங்களை பறிமுதல் செய்தனர். சிலாங்கூர் ஷா அலாமில் Jalan Haji Osman Kampung Batu Enam மிலுள்ள கிடங்கில் இரவு மணி 8.30 அளவில் மதுபானங்களை பறிமுதல் செய்ததாக Kelantan சுங்கத்துறையின் இயக்குனர் Wan Jamal Abdul Salam தெரிவித்தார். அந்த சோதனையின் போது மதுபானங்கள் நான்கு லோரிகளில் ஏற்றப்பட்டிருந்ததாகவும் அண்டை நாட்டிலிருந்து போர்ட் கிள்ளான் துறைமுக வாயிலாக அந்த மதுபானங்கள் கடத்தி வரப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.