கோலாலம்பூர், பிப் 4 – நேற்றுடன் முடிவடைந்த 1,200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த கால மருத்துவர்களின் உடன்பாட்டை சுகாதார அமைச்சு நீட்டித்துள்ளது. சுமார்
1,243 கிரேட் U 29 துணை மருத்துவ அதிகாரிகளை மீண்டும் நியமிப்பது என கடந்த மாதம் பிற்பகுதியில் மலேசிய பொதுச் சேவை ஆணையம் அங்கீகரித்தாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் Shafiq Abdullah தெரிவித்தார். அந்த துணை மருத்துவர்கள் அல்லது மருத்துவ உதவியாளர்கள் அமைச்சின் பயிற்சி கழகங்களில் பயிற்சியை முடித்தவர்கள் என்பதோடு அவர்களது ஒப்பந்த கால உடன்பாடு பிப்ரவரி 2 ஆம் தேதியோடு முடிவடைந்ததாக Shafiq Abdullah தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.