கோலாலம்பூர், மே 5 -1.25 மில்லியன் ரிங்கிட் மிரட்டல் விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு புக்கிட் அமான் வர்த்தக குற்றப்பிரிவுத்துறையின் மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். துணை கமிஷனர், துணை Superintendent , மற்றும் இன்ஸ்பெக்டர் நிலையிலான அந்த அதிகாரிகள் 38 மற்றும் 50 வயதுக்கிடையிலானவர்கள் என போலீஸ் படைத் தலைவர் Razarudin Husain தெரிவித்தார். அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லையென கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு மணி 9.20அளவில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதோடு இது குறித்த மேல் விவரங்களை Razarudin வெளியிட மறுத்துவிட்டார்.
அந்த சந்தேகப் பேர்வழிகளை தடுத்து வைக்கும் உத்தரவு இன்று பெறப்படும் என்று அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதோடு தகவல்களையும் மும்மூரமாக திரட்டி வருகின்றனர். அவர்களை நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு முன் அவர்களுக்கு எதிராக போதுமான தகவல்களும் ஆதாரங்களும் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என Razarudin தெரிவித்தார்.