
பட்டர்வெர்த், ஜன 18 – பினாங்கில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட மூன்று சோதனை நடவடிக்கையில் 1.6 டன் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சீனப் புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்வதற்காக அந்த பட்டாசுகள் தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது. 87,000 ரிங்கிட்டுக்கும் மேலான அந்த பட்டாசுகளுக்கான வரி மட்டும் 56,556 ரிங்கிட் என பினாங்கு சுங்கத்துறையின் இயக்குனர் Hamisan Kalip தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவியாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.